-: ஒளிமயம் வெளியீடு -24 :-
ஹரி ஓம்! எமது 24வது வெளியீடாக ‘முக்தி’ அல்லது ‘வாழ்வின் நிறைவு’ என்னும் இந்நூல் மலர்கின்றது. முன்னைய வெளியீடு களுக்குக் கிடைத்த ஆதரவும் பாராட்டும் இந்நூல்களை ஆண்டு தோறும் வெளிவரச் செய்கின்றது. இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழிக்கும் பேரருட் சக்தியை – அதன் கருணையை ‘அம்பாள்’ என இந்து மதம் அறிமுகப்படுத்தி உள்ளது. மூல சக்தி கருணையுடன் வெளிப் படுவதனால் அதைக் கருணை உள்ள பெண் வடிவமாகக் குறிப்பிட்டுள்ளது பொருத்தமானதே. படைப்பு முழுவதும் விரவிப் பரந்துள்ள சக்தியைக் கூர்மையாக ஆராய்ந்த சடப் பொருள் விஞ்ஞானம் அணுச் சிதறல்களாகவும் அவற்றிலுள்ள ஆழ்ந்த சக்தித் துகள்களுக்குள் பாரிய சக்தி நிரம்பி இருப்பதையும் அவைகள் துல்லியமாக வழிகாட்டலுக்கு உட்பட்டவை என்றும் உயிர்ச்சக்தி நிரம்பியவை என்றும் குவாண்டம், அணு, நனோ என்று பெயரிட்டு அழைத்தாலும் அவையெல்லாம் சக்தியின் கூறுகள் எனப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கின்றன. இவைகளின் ஈர்ப்பு ஒன்றையொன்று புரிந்து கொள்ளும் தன்மை என்பவை விஞ்ஞான அதிர்வுகளாக நம்முன் இப்போது விரிவுக்குட்பட்டிருக்கின்றன. ஆனாலும் விஞ்ஞானப் பார்வை என்பது இன்னமும் குறைத்துப் பார்ப்பதாகவே (Reductionism) வேதாந்திகள் கருதுகின்றனர். ஒவ்வொரு பொருளுக்கும் மூலம் என்று இருப்பதை விஞ்ஞானக் கண்ணால் இதுவரை பார்க்க முடியவில்லை. அந்த மூலத்தின் பெருங்கருணையே நமது வாழ்வு. அதனை விரிக்கவே இங்கு வாழ்ந்து சென்ற அனைத்து மகான்களும் உயரிய சிந்தனையாளர்களும் ‘அன்பு செய்’ என்று சொல்லிச் சென்றனர். அன்பு என்பது உடலிலுள் ‘செல்’ மண்டலத்தை ஒன்றிணைத்து, சக்தி நேராகி, அவரவர் மூலசக்தியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆத்ம சக்தியென்கின்ற உயிர்சக்தி மையத்தைத் தொட்டு வாழ்வின் நோக்கத்தை முழுமைப் படுத்தும். முழுமைப்பட்டாலே எல்லோரும் ஏங்கி நிற்கும் ஆனந்தத்தை அளிக்கும். உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் ஏற்படும் இந்த இணைப்புக்கு பெயரே ‘முக்தி’ அல்லது ‘வாழ்வின் நிறைவு’. இதன்பின் அடைவதற்கு எந்த எல்லையுமில்லை; எந்தத்தொல்லையும் இல்லை. இவற்றைப் பகுதி பகுதியாக விபரிப்பதே தொடரும் கட்டுரைகள். அனைத்து மதங்களும் இறுதியாகச் சுட்டி நிற்பவை இதைத்தான் என்பதைப் புரிந்து பரிணாம உயர்வை அடையுங்கள். எனது சிஷ்யை விஜயா ராமனின் தொகுப்பில் இந்நூல் வெளிவருகிறது. கிருபா, இருதயா, சசி, விவேகா ஆகியோருக்கும் எமது ஆசிகள்.அன்பு, ஒளி, ஆசிகளுடன் ஸ்வாமி பரமாத்மானந்தா ரொறன்ரோ
ஜுலை, 2016

1. அகிம்சையும் ஆனந்தமும் 2. அனைவரையும் நான் மன்னிக்கிறேன் 3. என்னுள் பொறுமையை வளர்ப்பேன் 4. வருவதை ஏற்றல் நன்று 5. ஏற்பதால் ஏற்படும் மாற்றங்கள் 6. உண்மை பேசுதலின் உயர்வு 7. பொறாமை என்பது நிறைவின்மையே 8. வாழ்வைச் சுகமாக்கும் சுவாசப் பயிற்சி 9. அனைத்துப் பெருமையும் அவனுடையதே 10. எளிமை என்னும் நற்பண்பின் அடையாளம் 11. பெற்றவை அனைத்தும் நிலையற்றவை 12. எல்லாமே அவன் தந்தது 13. மன நிறைவும் பிரார்த்தனையும் 14. ஜபம் வேறு பிரார்த்தனை வேறு 15. நன்றி தெரிவிப்பதும் பிரார்த்தனையே 16. மரணம் என்பது உடலுக்குத்தான் எனக்கல்ல 17. ஒருவரது எண்ணப் போக்கை ஞானம் மாற்றுகின்றது 18. சித்தத்தைச் சுத்தப்படுத்துங்கள் 19. சூழ்நிலைகளின் சாட்சியாக இருக்கப் பழகுங்கள் 20. கருணை என்பது கடவுள் தன்மை 21. நான் என்பது சாக வேண்டும் 22. மானிடர் ஆன்மா மரணம் எய்தாது 23. அறிவுத்தேடல் ஞானமாகி அத்வைதமான நிலையில்
Title : Mukthy or Valvin Niraivu Author : Swami Paramatmananda Typesetting : Selva Graphics Printed by : Brilliance Printers / Viveka Published by : Canada Yoga Vedanta Organization (CYVO) Issue: July, 2016 Pages : 215