மனிதனுக்குத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருப்பதால் அவனது மனம் எப்பொழுதும் சிக்கல்களையும் போராட்டங்களையும் உடையதாக இருக்கிறது. ஏனெனில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற சிக்கல்கள் ஏற்படும். அனைவரது மனமும் ஒரு போர்க்களம்தான். அனைவருக்கும் பிரச்சனைகள் உண்டு என்பதுதான் உண்மை. எந்த நேரத்தில் எப்படிச் செயல்படும் என்று அறிய முடியாத மனம் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களுடன் ஒரே விதமான உறவு அவனால் கொள்ள முடிவதில்லை.
ஏன், தன்னுடனேயே எப்படி உறவு கொள்வது என்பது அவனுக்குத் தெரிவதில்லை. இந்த மனப் போராட்டம் மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே வந்திருக்கிறது. இது மனிதனின் அடிப்படைப் பிரச்சனை. தற்காலிகமாக மனதை அடக்கி வைப்பதால் அல்லது வேறு விடயங்களுக்கு மாற்றி வைத்தாலும் மீண்டும் மனம் தனது சிக்கலைத் தோற்றுவித்துக்கொண்டே இருக்கும். அதனால் இந்த மனம் என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. மனம் எண்ணங்களின் தொகுப்பு. அதற்குப் பதிலாக வேறு எண்ணங்களை நட்டால் மனதை மாற்றி விடலாம் என positive Thinking ஐ நட்டுத் தோல்வி கண்டுவிட்டது நவீன உளவியல் துறை.
ஆனால் வியாசரால் தொகுக்கப்பட்ட உபநிடதங்களோ (வேதாந்தம்), மனதில் தோன்றும் எண்ண எழுச்சிகள், தொடர் பிறப்புக்களில் ஏற்பட்ட அழுத்தமான பதிவுகளின் வெளிப்பாடே என அறிவு பு+ர்வமாக உரைக்கின்றன. அவற்றின் எழுச்சிகள், செயல் உருவம் பெறும்போது வாழ்க்கை என மேலும் கூறுகிறது. இவற்றைத் தெளிந்த அறிவு பெற்ற (ஞானம்) புத்தியினால் – ஆன்மிகப் பயிற்சிகளால் – தியானத்தால் அழிக்கவும் மேலும் பதிவுகள் ஏற்படாமலும் புலன்கள், மனம், புத்தியாக எனது பதிவுகளை ஏற்றுச் செயலாற்றிய ஆத்மாவின் உயிரின் விரிவுகளைச் சுருக்கி மீண்டும் ஆத்மாவுடன் இணைப்பதே – இணைத்து மகிழ்வதே இப்பிறப்பின் நோக்கமாகும் என அடித்துச் சொல்கிறது. மற்றைய மதங்களோ, தத்துவங்களோ இவ்வளவு ரத்னச்சுருக்கமாகச் சொல்லவில்லை. இவற்றை உணர்ந்து கொள்ள ஒரு வழிகாட்டி – ஒரு குரு அவசியம். தானே நுhல்களில் கற்று, வீடியோக்களில் பார்த்துத் தனக்குள் பதியம் வைத்துக்கொள்ள முடியாது. அம்முயற்சிகள் அகந்தையை வளர்க்குமேயன்றி அழிக்காது. முதல் குருவாகக் கொள்ளப்படு;ம் வியாசர் வேதங்களைத் தொகுத்து வேதாந்தமாகிய உபநிஷதங்களுக்கு விளக்கம் கொடுத்து அவ்விளக்கத்தை மகாபாரதத்தில் அறிவுப் பொக்கிஷமான பகவத்கீதையாகச் செலுத்தி அப்பொழுதும் திருப்தியுறாமல் புராணங்களாக – கதைகளாக வைத்து, தத்துவ உண்மைகளுக்கு வடிவம் கொடுத்து, சனாதன தர்மநெறிகளை சாதாரண மக்கள் மத்தியில் உலவவிட்டு, கலாச்சார நெறிகளை ஏற்படுத்தி மனிதனை அதியுயர் நிலைக்குச் செல்ல வழி செய்தார்.
இன்று சாதாரண இந்து மனங்களில் உள்ள தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், மத உணர்வுகள் வியாசரின் முயற்சியினால் ஏற்பட்ட வெளிப்பாடுகளே. இதிகாசமான மகாபாரதச் செய்திகள் எல்லாம் உளவியல் சொத்துக்களே!(Psychological Treatise)
வியாசரைத் தெரிந்திருக்காவிடிலும் அவரால் ஏற்படுத்திய உளவியல் பாத்திரங்கள் எல்லா குடும்பங்களிலும் வாழ்ந்து வருகின்றன.
எல்லோரது குடும்பத்திலும் ஒரு பீமன், அர்ச்சுனன், தருமர், சகுனிமாமா, குந்தி, பீஷ்மர் என்று பாத்திரமேற்பவர்கள் தவறாமல் உண்டு என்பதையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஆகவே வழிகாட்டி Pசநஉநிவழச கிடைப்பதும் பரிணாம உந்தலே என்பதுவும் உபநிடதக் கூற்று.