அதர்மத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்தும் மறைய ஆரம்பித்து விட்டன. புவியியலும், பொருளியலும், அரசியலும் குமுறுகின்றன. அனைத்துத் துறைகளிலும் போலிகளின் ஆட்டம் ஒடுங்கப் போகின்றதற்கான சமிக்ஞைகள் ஆரம்பித்து விட்டன. ஆழமான ஆன்மிகத்தில் நிலை கொண்டுள்ளவர்களைத் தவிர மற்ற அனைத்துப் பகுதியினரும் விரும்பாத மாற்றங்களுக்கு முகம்கொடுத்தே ஆகவேண்டும் என்ற நிலை காலத்தின் கட்டாயம். பிரம்மம் என்ற பரம் பொருள் தனது படைப்பின் ஒரு படையை (டுயலநச) உரிக்க ஆரம்பித்து விட்டதை ஆன்மிகவாதிகள் மட்டுமே உணர்வர். பரம்பொருளின் இருப்பைச் சந்தேகப்படுபவர்கள் இன்று உலகில் எங்கும் இல்லை. மதங்களை எதிர்ப்பவர்கள்கூட ஊழளெஉழைரளநௌள என்ற பரம்பொருளின் இருப்பை, வியாபகத்தைப் பற்றிய கேள்வி கேட்பதில்லை. தர்மப்படி நடந்தால் – தார்மீக வாழ்க்கையை மேற்கொண்டால் சிக்கல்கள் இல்லாத அமைதியான வாழ்வை வாழ முடியும்.
இன்று நியு+ ஜேர்ஸி பல்கலைக்கழகத்தில் பகவத்கீதை கட்டாய பாடமாக்கப்பட்டிருக்கிறது. வேத பொக்கிஷத்தின் சாரமே கீதை என்பது என இன்று பலருக்கும் புரிந்து விட்டது. இந்துக்கள் என்று கூறிக்கொண்டு இவைகளை அறியாமல் இருந்து விட்டோமே என்று பலர் அங்கலாய்த்ததுண்டு. யோகமும் வேதாந்தமும் அறிவியல் ரீதியாக அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பாடமாக இடம் பெற்று வருகின்றன. நமது இந்துக்கள் இதில் எங்கே இருக்கிறார்கள் என்று கேள்வி கேட்பது விசனத்துக்குரியது; வருந்தத்தக்கது. எந்தக் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறோமோ அதுபற்றி எதுவும் தெரியாமல் இருக்கிறோமே என்ற பார்வை இன்னும் ஏற்படவில்லை. இந்த சொற்பகால வாழ்வைச் சரியான நோக்கில் பார்க்க வேண்டாமா? வாழ வேண்டாமா? சடப்பொருளான உடம்பிலிருந்தாலும் மென்பொருளான உள்ளத்தினாலேதான் வாழ்கிறோம். சடப்பொருள், மென்பொருள் எல்லாம் மாறக்கூடியவை; மாயத்தோற்றம் கொண்டவை; பொய்யானவை. ஆகவே பரம்பொருளாக, ஆத்மாவாக, உயிராக உள்ளுறைந்திருப்பதுடன் இணைதலே பொய்மையிலிருந்து விடுவிக்கும். அந்த இணைதலுக்கே யோகம் என்று பெயர்.
இணைதல் என்பது ஆனந்தம். ஆழ் உறக்கத்தில் அதே நிலை ஏற்படுகிறது. தியானத்தில் ஏற்படுகிறது. சமாதி நிலையில் நிலை பெறுகிறது. அந்நிலையை இலகுவாக அடைய முடியும். அதற்கு ஞான அறிவு தேவை. வுநஉhnஙைரந உபாயம் மயக்கத்தைக் கொடுக்கும். தேவை- ஞானமே. ஞானம்தான் கருணையைப் பீறச் செய்யும். கருணையில் மூழ்கி மூழ்கி எழுவதே ஆன்மிக ஆனந்தம். அனைத்து ஜீவராசிகளும் மரங்களும் செடிகளும் வானமும் பிரபஞ்சமும் நானும் ஒன்று என்ற ஆன்மநேய ஒருமை ஏற்படும். அந்த ஒருமைத்துவம் அமரத்துவத்தை அளிக்கும்.
சிந்தியுங்கள்! இயற்கை அதை நோக்கி உங்களை உந்தித் தள்ளுவதைக் காண்பீர்கள். உயர் பரிணாம நிலைக்குச் செல்வதை எந்தப் படைப்பும் தவற விட்டுவிட முடியாது. ஆழமாகச் சிந்தித்தால் புரியும். சிந்தியுங்கள்! அன்பும் சாந்தியும் மலரட்டும்!