தியானம் செய்பவர்களுக்குக் குளிர்ச் சூழ்நிலை மிக உகந்தது. இந்தியாவில் தியானம் மேற்கொண்ட ரிஷிகள் இமயமலையை நாடிச்சென்றது குளிரில் தியானம் மிகச் சிறப்பாக அமையும் என்பதற்காகத்தான். தெற்குப் பகுதிகளில் வாழ்ந்த சந்நியாசிகள் பெரும்பாலோரும் இமயமலை நோக்கிச் சென்றுதான் தவம் செய்தனர். ஏனெனில் தெற்கில் வெப்பம் அதிகம். வியர்த்துக் கொட்டும். இதோடு குளிரில் குண்டலினி சக்தி விரைவாக மேலே ஏறும். திருநெல்வேலியிலிருந்த னுச. குப்புசாமி என்பவர்தான் சுவாமி சிவானந்தராக ரிஷிகேஷ் சென்று அங்கு தங்கி காட்டுப்பகுதிகளை வெட்டிச் சீராக்கி சிவானந்தா ஆசிரமத்தை சிறுசிறு குடிசைகளாக உருவாக்கி னார். தென்னிந்தியாவில் இருந்து சென்ற சிதாநந்தா, சின்மயானந்தா போன்ற சந்நியாசிகள் எல்லாம் அங்கு சென்று தங்கினர். தவத்தில் மேம்பட்டனர். அதோடு மட்டுமன்றி குளிர்ந்த மலைப்பகுதிகளில் ஏறுகின்றபோது உடலிலும் உள்ளத்திலும் ஓர் அமைதி ஏற்படும். கனடாவில் எல்லோருக் கும் கடுமையாகத் தெரிகின்ற இந்தக் குளிர் நிறைவான தியானத்திற்கென உங்களுக்கு உதவவேண்டும். அதிக நேரத்தைத் தியானத்திற்கெனப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.தியானம் செய்பவர்களுக்குக் குளிர்ச் சூழ்நிலை மிக உகந்தது. இந்தியாவில் தியானம் மேற்கொண்ட ரிஷிகள் இமயமலையை நாடிச்சென்றது குளிரில் தியானம் மிகச் சிறப்பாக அமையும் என்பதற்காகத்தான். தெற்குப் பகுதிகளில் வாழ்ந்த சந்நியாசிகள் பெரும்பாலோரும் இமயமலை நோக்கிச் சென்றுதான் தவம் செய்தனர். ஏனெனில் தெற்கில் வெப்பம் அதிகம். வியர்த்துக் கொட்டும். இதோடு குளிரில் குண்டலினி சக்தி விரைவாக மேலே ஏறும். திருநெல்வேலியிலிருந்த னுச. குப்புசாமி என்பவர்தான் சுவாமி சிவானந்தராக ரிஷிகேஷ் சென்று அங்கு தங்கி காட்டுப்பகுதிகளை வெட்டிச் சீராக்கி சிவானந்தா ஆசிரமத்தை சிறுசிறு குடிசைகளாக உருவாக்கி னார். தென்னிந்தியாவில் இருந்து சென்ற சிதாநந்தா, சின்மயானந்தா போன்ற சந்நியாசிகள் எல்லாம் அங்கு சென்று தங்கினர். தவத்தில் மேம்பட்டனர். அதோடு மட்டுமன்றி குளிர்ந்த மலைப்பகுதிகளில் ஏறுகின்றபோது உடலிலும் உள்ளத்திலும் ஓர் அமைதி ஏற்படும். கனடாவில் எல்லோருக் கும் கடுமையாகத் தெரிகின்ற இந்தக் குளிர் நிறைவான தியானத்திற்கென உங்களுக்கு உதவவேண்டும். அதிக நேரத்தைத் தியானத்திற்கெனப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Consciousess என்னும் சித்தத்திற்குள் சித்தாக இருக்கின்ற ஒன்று பிரபஞ்சம் முழுவதுமாகப் பரவியிருக்கிறது. அதை நாங்கள் எங்களது பொருள் முதல் சிந்தனையிலிருந்து பொருளில்லா சித்தத்திற்கு மாற்ற வேண்டும். அதை நோக்கிச் செல்வதும் உண்மையை அறிவதும் ஆகிய இரண்டையும் சேர்த்துத்தான் ஆன்மீகம் என்று சொல்கிறோம். உலகத்தில் குறிப்பிடுகின்ற அன்பு என்ற சொல்லுக்கு அதை வெளிப்படுத்த ஓர் ஆள் அல்லது ஒரு பொருள் தேவை. நான் சொல்கின்ற அன்பு என்ற சொல்லுக்குப் பொருளோ மனிதர்களோ தேவை யில்லை. எந்தவித எதிர்பார்ப்புமின்றித் தானாக வெளிப்படு கின்ற அன்பு இது. இதை நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால் அன்பு செலுத்த வேறு எதுவும் தேவையில்லாமல் இயல்பாக நம்மிலிருந்து பெருகுகின்ற அன்பு என்று விளங்கும். உங்களை நீங்களே அன்பு செலுத்துகின்ற நிலை இது.
உங்கள் வாழ்க்கையில் கர்மாவால் உருவாக்கப்பட்ட சூழ்நிலைகளில் சிக்கிப் பிழையாக நடந்துகொண்டுவிட்டுப் பிறகு அதற்காக உங்களை நீங்களே வெறுத்திருக்கின்ற சந்தர்ப்பங்கள் இருந்திருக்கின்றன. நான் அறியாமையால் அப்படிச் செய்துவிட்டேன் என்று உங்களை நீங்கள் வெறுக் காமல் பார்த்திருக்க வேண்டும். முன்பு சரியாகத் தெரிந்தது இப்போது முட்டாள் தனமாகவும் பிழை செய்து விட்டேன் என்ற குற்ற உணர்வையும் தருகின்றபோது கர்மா வழி காட்டியது, நான் அதைச் செய்தேன் என்று சிந்தித்தால் உங்கள்மீது உங்களுக்கு வெறுப்பு வராது.
நாம் நமது வாழ்க்கைப் பயணத்தில் எந்தவித முயற்சியும் இல்லாமலே மரணத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக் கிறோம். இதற்குள் நம்மாலான முயற்சிகளைச் செய்து இன்னொரு பிறப்பு என்ற பயணத்தில் சிக்காமல் தப்பிக்க வழியைத் தேடவேண்டும். அதற்கு நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இறைவனைப் பற்றிய சிந்தனை நிறைந்திருக்க வேண்டும். நினைவு கலங்கி உயிர் பிரிகின்ற நேரத்தில் அவ்வளவு சுலபமாக இறை எண்ணம் எழாது. ஆன்மீகப் பயிற்சியால் எந்த நேரமும் அவனையே மனதில் நினைத்து வழிபட்டுக் கொண்டிருந்தால் அந்தப் பயிற்சி தந்த முதிர்ச்சியில் மரண நேரத்தில் மனம் இறைவனை நினைத்துச் சரணடைய முடியும்.
மனதைப் பொறுத்துத்தான் வாழ்வு என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. நாம் யாரையாவது பகையாக நினைத்தால் அந்த நினைவு நம்மையே தாக்குகிறது. எதிர்மறைச் சிந்தனை நம் உடலிலுள்ள மிக நுண்ணிய அணுக்களைத்தான் அதிகமாகப் பாதிக்கின்றது. எண்ணத்திற்கும், வாக்கிற்கும், மனதிற்கும் அவ்வளவு நுட்பமான தொடர்பு இருக்கிறது. எப்பொழுதும் நல்லதையே நினைக்கின்ற பயிற்சி வேண்டும். ஏனெனில் எனக்கும் எண்ணத்திற்கும் கர்மத் தொடர்பு இருக்கிறது. எண்ணம்தான் வாழ்க்கையாகப் போகின்றது. இந்நிலையில் அமைதியாக இருக்கப் பழகுகின்ற பயிற்சி எண்ணங்களை எழவிடாமற் செய்கிறது. இவ்வாறு நான் சொல்கின்ற பயிற்சிகளெல்லாம் கர்மாவை இயங்கவிடாமல் உங்கள் மனதிலிருந்து கர்மாவை அழிப்பதற்கான வழிகள். கர்மாவை அழித்து விட்டால் ஜீவன் என்பது மாறி, இருப்பது உயிராக நிற்கிறது. படைப்பின் கீழ்நிலை ஜீவன். நடுநிலை உயிர். உண்மைநிலை ஆத்மா. ஆத்மா + கா;மா ஸ்ரீ ஜீவன். கர்மா இல்லையெனில் அது உயிராய் இருக்கிறது. அந் நிலையில் எனது உள்ளுணர்வை ஞானத்தால் உயர்த்திய வுடன் அது ஆத்மாவாயிற்று. நான் இதை என் உணர்வால் தான் ஆத்மாவாக மாற்றமுடியும். அறிவால் அறியலாம். ஆனால் உணர்வால்தான் ஆத்மாவாக மாற்றமுடியும். ஏனெனில் இந்த உலகம் உணர்வால்தான் பின்னப்பட்டிருக்கிறது.
உங்களோடு பழகுபவர்கள் உங்கள் கர்மாவோடு தொடர்பு பட்டவர்கள். எனது கருத்து எனது கர்மாவிலிருந்து வெளிவருவது. கர்மாவும் மாயையும் ஒன்றுக்கொன்று தொடர்பு பட்டவை. நிகழ்வது மாயை என்பது தெரியும். ஆனால் அதை விலக்க முடியவில்லை. விலக்க முடிந்தவர்கள் ஞானிகள். உங்கள் பார்வை இறைப்பார்வையாய் இருந்தால் மாயையை நீக்கிப் பார்க்கும். இப்போது நாம் கர்மாவை வெல்ல முயற்சி செய்துகொண்டு வருகிறோம். மாயை பற்றிய அறிவு வரவர கர்மா சேர்வது குறையும். மனிதரைப் பற்றியோ உலகத்தைப் பற்றியோ பத்து வருடங்களுக்கு முன்னால் கொண்டிருந்த அபிப்பிராயம் இப்போது இல்லை. கருத்து மாறிக் கொண்டே போகிறது. உங்களைப் பற்றிய கருத்தும் இந்த சாகாக் கல்வியான வேதாந்தத்தை அறிவதால் மாறி யிருக்க வேண்டும். உங்களது பரிணாம வளர்ச்சி உயர்ந் திருக்க வேண்டும். இப்படிப் பரிணாமத்தில் உயர்கின்றவன் மீண்டும் பிறப்பில்லாத நிலைக்குப் போகிறான். போனவருஷம் நீங்கள் ஆன்மீகத்தைப் பற்றிக் கொண்டிருந்த கருத்து இந்த வருடம் மாறியிருக்க வேண்டும். கோவில்களோடு நின்றிருந்த ஆன்மீக அறிவு, பூஜை, வழிபாடு, சடங்குகள், வேண்டுதல்கள், என்றெல்லாம் மாறி மாறி இப்போது அவன்தான் நான் என்ற அறிவில் வந்து நிற்கிறது. சமூக நடைமுறைகள் இந்தப் பரிணாம உயர்விற்குத் தடையாக இருக்கின்றன.
தொடர்ந்து இறையனுபவத்தை நன்றியுணர்வுடன் அனுபவித் துக் கொண்டிருக்கும் விதமாக என்னை நான் மாற்றிவிட்டேன் என்றால், மரணநேரத்தில் அது தானாகவே என்னுள் எழும். பயிற்சியில்லையென்றால் பயமும், தவிப்பும்தான் ஏற்படுமே தவிர இறை சிந்தனை வராது. தொடர்ந்த பயிற்சியும் ஞானமும்தான் இதற்கு அவசியம். சொல்வதை அப்படியே கேட்டு அதை விடாமல் தொடர்ந்து பயிற்சி பண்ணினால் தான் அது உணர்வாக மாறும். உணர்வாய் மாறினால்தான் அது என்னில் பதியும்.
வாழ்வில் ஏற்படுகின்ற அன்றாடப் பிரச்சனைகளைத் தவிர வேறு தனியாக என்ன பிரச்சனை இப்போது இருக்கிறது? அப்படியே பிரச்சனைகள் தீர்க்க முடியாமல் ஏற்பட்டிருந்தாலும் அது உன் கர்மாவால் ஏற்பட்டது என்ற அறிவு இப்போது உனக்கு இருக்கிறது. அது காலத்தால் தீரவேண்டிய விதத்தில் தீர்ந்து போகும் என்ற தெளிவும் ஏற்பட்டுவிட்டது. மேலும் பிரச்சனையாகத் தெரிவது மனதின் எண்ணமே தவிரப் பிரச்சனை உண்மையில் நம்மைப் பாதிப்பதில்லை. நித்திரையில் பிரச்சனை நம்மை வருத்துவதில்லை. ஏனெனில் நித்திரையில் மனமில்லை. ஆகவே மனதை ஒழுங்குபடுத்தி அறிவுபு+ர்வமாகச் சிந்தித்தால் பிரச்சனை தீர வழி தெரியுமே தவிர உன்னைப் போட்டு அலைக்கழிக்காது.
உன்னைப் படைத்த நாளிலிருந்து உனக்குத் தேவையான வற்றையெல்லாம் அதுதான் செய்து கொண்டிருக்கிறது. ஆன்மீகத்தை அறிந்து ஞானம் பெறுவதற்கு முன்பும் நீ எப்போதும் வெறும் துன்பத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்ததில்லை. எத்தனையோ சந்தர்ப்பங்களில் சிரித்து, மகிழ்ந்து மிக சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவித் திருக்கிறாய். அந்த சந்தோசத்தை அனுபவிக்கச் செய்தது எது? உனக்குள் இருக்கும் சக்திதான் உனக்கு அந்த மகிழ்ச்சி நிலையை நீ அறியாமலேயே உனக்குத் தந்திருக் கிறது. இப்போது நீ அதுதான் எனக்கு எல்லாமாய் இருந்து செயல்படுகிறது என்ற உண்மையை அறிந்து சந்தோசப்படு. நான் விரும்பி எதுவும் நடக்கவில்லை. எல்லாம் அவன் விருப்பப்படிதான் நடக்கின்றன. சில எனக்குச் சாதகமாகவும் சில எனக்குப் பாதகமாகவும் என் கர்மாவின்படி நடக்கின்றன. நான் எதைச் செய்தாலும் அவனும் நானும் சேர்ந்துதான் அது செய்யப்படுகின்றது. சில வேளைகளில் பொங்கிப் பெருகு கிறது. சில நேரங்களில் அசையக்கூட மறுக்கிறது. அனைத் திற்கும் பின்னால் அவனும் நானும் இருக்கிறோம் என்ற உணர்வு இருந்தால் எதுவுமே நம்மைப் பாதிக்காது.
அறிவையும் ஞானத்தையும் நாம் பெறலாம். ஆனால் பெற்ற அறிவு அறிவாக மட்டும் இருக்காமல் உணர்வாக மாற இப்படிப்பட்ட பயிற்சிகளில் எப்போதும் நாம் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பரிணாமத்தில் உயர்ந்து விட்டோம் என்றால் புத்திக்கு வேலையில்லை. அதற்குப் பதிலாகப் புத்தியின் இடத்தில் ஆத்மா நின்று வேலை செய்யும். இது ஞானம். நடைமுறையில் இதை நீங்கள் கொண்டு வந்தால்தான் நீங்கள் இன்னொரு பிறவி எடுக்காமல் மீள முடியும். எனது உணர்வு முழுவதும் அவனைச் சார்ந்தே இருக்க வேண்டும். இத்தனை பிறவிகளையும் இறைவன்தான் தந்தான். இந்தப் பிறவியையும் அவன்தான் தந்திருக்கிறான். மேலும் அவனது நியதிப்படி படைப்பாகிய என்னால் இங்கிருந்து எதையும் கொண்டு போக இயலாது. நானாக எதையும் உருவாக்கவும் இயலாது. இருப்பவற்றைச் சேர்த்து வைத்து ஏதேதோ செய்து கண்டுபிடிக்கிறோமே தவிரப் புதிதாக எதுவுமே செய்ய முடியாது. அப்படியெனில் என்னுடையது என்று சொல்கின்றபோது ஏற்படுகின்ற கர்வம் அவனுடையது என்று சொல்கின்றபோது இல்லை.
ஒரு பொருள் என்பது உண்மையில் ஒளி. மாயையால் அது பொருளாய் தெரிகிறது. ஒரு பொருளின் உள்ளே இருக்கின்ற ஒளியைப் பார்ப்பதற்குத் தகுந்த பயிற்சி தேவை. அன்பு என்பது இயல்பானது. அது பொருள்களின் மீதும் மனிதர்கள் மீதும் படருவதாகத் தெரிகிறதே ஒழிய அன்பு என்பது எனக்குள் இருப்பது. நீ உன்னை முழு அன்பால் நிறைத்து அந்த அன்பால் வெளியிலுள்ள அனைத்தையும் நிரப்பினால் தான் உனக்கு முக்தி. அந்த அன்பெனும் சக்தி இறைவனிட மிருந்து கருணையாக வருகிறது. அன்பு செலுத்துகின்றபோது என்னில் நிறைவு ஏற்படுகின்றது. அன்பில்லாவிட்டால் ஓர் அணுவும் மற்றொரு அணுவும் ஒட்டாது. நாம் குறையாக இருப்பதற்குக் காரணம் கருணையை நிரப்பாததுதான். அன்பும் கருணையும் வெளிப்படுவதற்கு ஞானம் தேவையில்லை. உலகத்தில் எவ்வளவோ பேர் ஒன்றும் தெரியாதவர்களாக இருந்தாலும் இயல்பாகவே அன்பை அள்ளிச் சொரிவார்கள். அவர்கள் பேசுவதே மிக இதமாக இருக்கும். கருணையே வடிவாக நடந்து கொள்வார்கள். மிருகங்களிடம்கூட மிக அன்பாகப் பேசி அரவணைப்பார்கள். அவையெல்லாம் நாம் அவற்றைப் பார்த்துக் கற்றுக் கொள்வதற்காகத்தான்.
தனி மனிதனின் பரிணாம வளர்ச்சிதான் பிரபஞ்ச சுழற்சியின் நோக்கம். நீ பரிணாம உயர்வு பெறாவிட்டால் தூக்கி அடித்து விடும். உலகத்தோடு மனிதர்களுக்காகவும் பொருள்களுக் காகவும்தான் போராட்டம் நடைபெறுகிறது. அருளிலிருந்து தான் பொருள் வந்தது. பொருளைப் பெறுவதற்கும் அருள் வேண்டும். படைக்கப்பட்டவை அனைத்தையும் அவரவர் கர்ம வாசனையின் அடிப்படையால்தான் அணுகுகிறார்கள், விரும்பு கிறார்கள், வெறுக்கிறார்கள். இவற்றையெல்லாம் புரிந்து கொண்டு அன்பையும் கருணையையும் வெளிப்படுத்தி ஞானத் தால் கர்மாவையும் மாயையையும் வெல்ல வேண்டும்.
முயற்சி இல்லாத மாற்றமொன்று உங்களுக்குள் நடந்து கொண்டிருக்கிறதா? ஞானத்தைக் காதால் கேட்டதால், மனதால் சிந்தித்ததால் உணர்வாக மாற்றியதால் உங்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் முயற்சியில்லாத மாற்றமாகத் தெரி கிறதா? வாழ்க்கையின் விதிகளை அறிந்தபடியால் நீ எங்கும் இருக்கின்ற ஆத்மாவோடு சங்கமிக்கிறாய். அதனால் ஆன்மீக வளர்ச்சியாலும் அக மாற்றத்தினாலும் ஆனந்தம் நிரம்பிய வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். நீ என்ன செய்தாலும் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் உனது அடிநாதமாக உள்ளார்ந்த மகிழ்ச்சி உனக்குள் இருக்கின்றதா? உலகாயதமாக வாழ்க்கையில் எது நடந்தாலும் அது உன்னைப் பாதிக்காமல் யதார்த்தமாக ஏற்றுக்கொள்ள முடியுமா?
பிரபஞ்சத்தைப் பற்றிய சகல உண்மைகளும் ஒரு சாவிபோல வேதாந்தம் மூலம் உங்கள் கைகளில் தரப்பட்டிருக்கிறது. ஒரு பொருளை நீங்கள் பார்க்கின்றபோது அது மாயத் தோற்றம் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் அதில் மயங்குவீர்களா மயங்க மாட்டீர்களா என்பது தெரியாது. மயங்கினால் கர்மா வேலை செய்கிறது என்று பொருள். மயங்காவிடில் ஞானம் வேலை செய்கிறது என்று அர்த்தம். எல்லாவற்றையும் ஆன்மீகம் தீர்மானிக்கட்டும். மயக்கம் எல்லா மட்டத்திலும் இருக்கிறது. ஆசைதான் இந்த மயக்கங்களுக்குக் காரணம். இறைவனிடத்தில் நம்மிடம் இல்லாததை வேண்டுதல் பிரார்த்தனை. நம்மிடம் இருப்பது, நமக்குக் கிடைத்தது ஆகிய வற்றிற்காக இறைவனிடம் நன்றி செலுத்துவதும் பிரார்த்த னையே. நம்மிடம் இல்லாததைப் பார்க்கும் மனம், அறிவு, செல்வம், சூழ்நிலை, நல்உறவுகள், நமக்குக் கிடைத்த நன்மைகள் ஆகியவற்றைப் பார்த்து அவற்றிற்கெல்லாம் நன்றி செலுத்துவதும் பிரார்த்தனை. நமக்குக் கிடைத்ததை நினைத்து இறைவனிடம் நன்றி செலுத்துவோம். இறைவா! இவ்விதம் இன்று நான் இருப்பதற்குக் காரணமாயிருக்கின்ற உனக்கு எனது நன்றி. இந்தப் பிரார்த்தனையை உள்ளம் ஏற்றதென்றால் இல்லையே, இல்லையே என்ற ஏக்கம் வராது. மாறாக என்னுடைய வாழ்க்கை அவனது பிரசாதம் என்ற உணர்வும் ஏற்பட்டுவிடும். நன்றியுணர்வுடன் இதைத் தியானித் துக் கொண்டு இருக்க வேண்டும்.
இறைவனிடத்தில் பலவிதமான வேண்டுதல்களைப் பிரார்த் தனைகளாகத் தியானத்தில் செய்து வருகிறோம். உபநிஷத் துக்களில் அமைந்துள்ள சில பிரார்த்தனைகளைத் தியானமாக்க வேண்டும். அம்மந்திரங்களை ஓதினால் பாராயணம். மனதிற்குள் ஜபித்தால் தியானம். இவற்றில் முதல் பிரார்த்தனை ‘உபநிஷத்துக்களில் கூறிய அறப்பண்புகள் என்னிடம் இருக்கட்டும்’. மந்திரம் முக்கியமில்லை. அர்த்தம் தான் முக்கியம். ‘தர்ம நெறிப்படி நான் வாழ வேண்டும்’ எனது உடல் ஆரோக்கியமாக இருக்கட்டும்! இந்த ஆரோக்கியம் மோட்சத்திற்காகவே அன்றி போகத்திற்காக அல்ல. எனது சொற்கள் இனிமையாக இருக்கட்டும். இனிமை என்பது மற்றவர்களையும் என்னையும் புண்படுத்தாமல் பேசுவது. இந்த வாக்கியத்தைத் தொடர்ந்து தியானிப்போம். வாக்தபஸ் என்பது மிகமுக்கியம். வாய் பேசுகின்றபோது புத்தி கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். நானும் அவனும் வேறு வேறல்ல. இருவருமே ஆத்மா. ஆத்மாவிடம் ஆத்மா பேசுகிறது. அதை உணர்ந்து முறையாகப் பேசவேண்டும். நம்மையும் மீறி சொற்கள் பிறர் மனதைப் புண்படுத்தி விடு கின்றன. இறைவா! என் வாக்கு இனிமையாக, மென்மையாக இருக்கட்டும்! இதை மெதுவாகத் தியானித்துக் கொண்டு அமர்ந்திருப்போம்.