Description
அக வாழ்வின் உயர் நிலைஉங்களுடன் ஆசிரியர்…!
வணக்கம்!
‘ஒளிரும் உண்மைகள்’ வரிசையில் ஐந்தாவது பாகமாக இந்த ‘அக வாழ்வின் உயர் நிலை’ உங்கள் கரங்களில் தவழ்கிறது. வேத ஞான அறிவின் மூலம் சாதகர்களை / பயிலுனர்களைத் தங்களைத் தாங்களே அறிந்துணர்ந்து ஆனந்தமடையச் செய்யும் பயிற்சியை கடந்த ஓராண்டு காலமாக அவர்களுக்கு வழங்க அருள் அனுமதித்தது. ஆன்மீகவாதிகளுக்கே நுட்பமாக விளங்கும் ‘ஆத்ம அனுபூதி’ Self Realization அந்த அனுபவம் பெற்றவர்கள் ஆசீர்வாதம் பெற்றவர்கள்.
இந்த அனுபவப் பதிவுகளை யாரும் இந்தளவில் பதிவு செய்ததாக அல்லது ஒரு நூலாக தமிழில் வெளிவரவில்லை என்பது எமதெண்ணம். ஆரம்ப ஆன்மீக அனுபவமில்லாதவர்களுக்கே விளக்கமுறும் வண்ணம் இந்த ‘உயர்நிலை’ வழங்கப்பட்டிருக்கிறது. உலகியல் அறிவை மட்டுமே கொண்டிருப்பவர்கள் கூட சிந்தனையுடன் நோக்கினால் இது புரியும். போகுமிடம் – போக வேண்டிய இடம் நன்றாகப் புலப்படும். அதன் மூலம் வாழ்க்கை என்றால் என்னவென்று சட்டெனப் புரியும். அப்படிப் புரிந்து கொள்ள முயற்சிப்பவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம் ஆகிறது.
இதன் ஆக்கத்தில் உதவிய மாணவர்கள் திருமதி யோகேஸ்வரி குமரேஸபசுபதி, ஆனந்தி மகேந்திரன்,இருதயநாத் சிங் ஆகியோர் எமது அன்பு கலந்த நன்றிக்கு உரியவர்கள்.
– ஸ்வாமி பரமாத்மானந்தா
ரொறன்ரோ
03.03.2008
There are no reviews yet.