Description
அன்பு ஒளி ஆனந்தம்
உங்களோடு….
ஹரி ஓம்
அன்புள்ளங்களே!
புதிய ஆன்மீக புரிதல்; அடிப்படை ஆன்மீக விழிப்பு என்பதிலிருந்து அன்பு, ஒளி, ஆனந்தம் விரிந்துள்ளது. ஆன்மீக உணர்வு நிலையில் படிமுறைகளில் இருந்து முன்னேறிச் செல்லும் தவறற்ற வழியை காண்பிக்கின்றது. இதயநிலை விழிப்புணர்வு (Heart cen-tered consciousness) ஆன்ம விழிப்புணர்வுக்கு வழியாய் அமைந்து விட்டதை முன்னைய நிலையிலிருந்த பல்லாயிரக் கணக்கானோர் இன்று அனுபவிக்கத் தொடங்கி உள்ளனர்.
தியானத்தை ஞானத்துடன் இணைத்துப் பார்த்தால் விஷய வாசனைகளையும் சாதனைகளையும் பல பிறவிகளையும் கடந்து அடையும் ஆன்மீக ரகசியம் என்பது எளிமையானது என்றும் எவருக்கும் ஞானமடைதல் சாத்தியம் என்பது பரவலான ஏற்பு. மனோ லயத்திலிருந்து மனோ நாசம் என்ற மனம் இல்லா நிலையில் ஆன்ம வெளிப்பாடு சூன்யப் பிரவாகமாய் – வெளிப் பொழிவாகமுயற்சியுள்ளோர் பலரது அனுபவமாய் அமைந்து விட்டது.
வரையறையிலா அன்புணர்வுக்கு (Unconditional Love) அனுமதிக்கும் பொழுது இயல்பாகவே இதயம் பொங்கி ஆன்ம ஒளிக் கற்றைகளின் பரவலால் உந்தலுணர்வுடன் கூடிய உயிர்ச் சக்தியின் நிறைவை அனுபவிக்கிறார்கள். ஒளியினூடு ஆனந்தத்தைக் காண்கிறார்கள். ஆத்ம தொடர்பினால் ஏற்படும் ஆனந்தம் எந்த வெளிச்சூழல்களாலும் நிலைகளாலும் ஏற்படுவது அல்ல.
புதிய ஆன்மீகப் புரிதலின் முத்திரையாக அன்பு,ஒளி, ஆனந்தம் என விளங்குகிறது. இவைகள் ஆன்மீக விழிப்பு நிலையின் பெறுபேறுகள். இவை பூமிப் பந்தின்புதல்வர்கள் அனைவருக்குமுரியது. காலத்திற்கேற்ற இந்நூலில் உள்ள 21 கட்டுரைகளும் உங்களை நிச்சயம் புரிதலுக்கும் ஆனந்தத்திற்கும் அழைத்துச் செல்லும்.
இவை வரையறையிலா அன்பு, உந்துணர்வால்(Inspiration) ஏற்பட்ட அறிவின் ஒளி, பாரிய ஆக்க சக்தி உள்ள ஆத்மாவின் இணைப்பால் ஏற்படும் மாறாத மகிழ்ச்சி என்பவைகளை உள்ளடக்கியுள்ளது.புதிய புரிதலின் வெற்றி, பணத்தால் அளவிடப்படாமல் நீ அனுபவிக்கும் மகிழ்ச்சியின் அளவால் அளவிடப்படும். இது நமது 17வது வெளியீடாகும்.
விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மானிடக்கடமையாகும். அதுவே வாழ்க்கையாக அமைந்தது பேரருளின் உந்துதலே.
அன்பு, ஒளி, ஆனந்தத்துடன்
ஸ்வாமி பரமாத்மானந்தா
ரொறன்ரோ
03.03.2012
There are no reviews yet.