Description
உள்ளொளிப் பயணம்
முன்னுரை
ஆசிரியரிடமிருந்து….
குருபூர்ணிமா வெளியீடு, ஜூலை 2014
ஹரி ஓம்!
எமது 20வது வெளியீடு ‘உள்ளொளிப் பயணம்’ ஆக, குரு பூர்ணிமா அன்று மலர்கின்றது.இந்த நொடிப் பொழுதை பயன்படுத்தாமல் , வாழாமல், ஊடுருவிச் செல்லாமல் நழுவி ஓடி விடுவதற்கு விட்டு விடாதே. இந்தப் பூமியில் கோடிக்கணக்கான மக்கள் புகழ் பெற்றவர்களாக இருந்தனர். ஆனால் இப்போதோ அவர்களின் பெயர்கள் கூட யாருக்கும் தெரியாது.
பணம் உனக்கு சில நல்லவற்றைக் கொண்டு வந்திருக்கலாம். அது வரும்போது அனேக கெட்ட விஷயங்களையும் கொண்டுவந்திருக்கும். கடவுள் என்கிற ஒருவரைத்தான் மக்கள் விரும்பு கிறார்கள்; கடவுள் தன்மையை விரும்புவதில்லை. கடவுளை அனுபவிக்காவிட்டால் அவர் வெறும் ஒரு வார்த்தையாக மட்டுமே இருக்கிறார்.
கடல் சீற்றம் அதிகம் இருக்கும்போது எல்லோரும் கடவுளை நினைக்கிறார்கள். அதில் எந்தச் சிறப்பும் கிடையாது. அது பயத்தின் காரணமாகக் கடவுளை நினைப்பதாகிறது. முகம் பார்க்கும் கண்ணாடி எல்லாவற்றையும் பிரதிபலிக்கிறது. ஆனால் ஒருபோதும் அதன் முன்னால் உள்ள பொருளுடன் அது தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வதில்லை. அதைப்போன்று உங்களால் இருக்க முடியுமா? முடியுமானால் நீங்கள் ஆன்மீக விடுதலைக்கு ஆயத்தப்படுகிறீர்கள் என எண்ணலாம்.
உலகில் உள்ள பொருள்களை ஏதாவது பாட்டுக்குள் அடக்கிக் கூறுவது அறிவியல் முறை. ஒரு வகைப் அதைத் நவீன முறையில் என மூவகைக்குள் அடக்கிக் கூறினார். காட்சி, கருத்து என இருவகையாகப் பகுக்கப்படுவதையும் சுட்டி நிற்கிறது.
காலப் பகுப்பு, உயிரியல், உளவியல், ஒளி பிறப்பு என வேதாந்தப் பயிற்சிகளின் விளைவுகள் அறிவியல் பூர்வமாக ஆன்மீகம் விளக்கப்பட்டிருக்கிறது. நாம் எதை அடைய விரும்புகிறோமோ அதை அடைவதற்குத் தேவையான ஆற்றலை நாம் பெறுவதற்கு நம்முடைய சிந்தனைகளையும் செயல்களையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் மனப்போக்கைப் பெற வேண்டும். உணர்ச்சி ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் நாம் எல்லோருமே வாழ்க்கையில் சளைக்காமல் தேடிக் கொண்டிருப்பவைகளை இறுதியாக எவையெல்லாம் உண்மையானவையோ, எவையெல்லாம் அன்பு மயமானவையோ, எவையெல்லாம் நல்ல செய்திகளோ அவையெல்லாம் உயர்ந்த பண்புகளாகவும் வணக்கத்திற்குரியதாகவும் இருக்கும் நிலைமையில் அவை குறித்துத் தியானம் செய்யுங்கள். அப்போது அமைதியான பிரம்மம் உங்களுடனேயே இருப்பதைக் காண்பீர்கள். ஆன்ம நெருப்பில் உங்களை நீங்களே இட்டுக் கொள்ளுங்கள். நம்முடைய உண்மையான தனித்தன்மையைக் கண்டறியும் அந்த இன்பமயமான பயணத்தைத் தொடங்குவோம். வாழ்க்கையைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க உதவும் நூலாக இப்புத்தகம் அமைகிறது. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளைத் தைரியமாக எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி மனிதனின் இறுதி நோக்கை தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
அன்பு, ஒளி, ஆசிகளுடன்
ஸ்வாமி பரமாத்மானந்தா
ரொறன்ரோ
ஜூலை, 2014
குருபூர்ணிமா
There are no reviews yet.