Original price was: $24.99.Current price is: $19.99.

ஒளிரும் உண்மைகள் 1

Tamil Books

197 in stock

- +

Description

ஒளிரும் உண்மைகள் 1

ஹரி ஓம்!
கனடா யோக வேதாந்த நிறுவனம்,
ரொறன்ரோ.
உங்களோடு…

ரொறன்ரோவில் எமது ஆன்மீக சாதகர்களுக்கு, அறிவியல் பூர்வமாக விளங்க வைத்து, அவர்களின் வாழ்வில் ஒரு பண்பாட்டு மலர்ச்சியையும், வாழ்வின் சரியான நோக்கத்தையும் புரியவைத்து, அந்நோக்கை அடைவதற்கான பயிற்சியையும் அளித்து, ஆனந்தத்தை அவர்கள் மீண்டும் கண்டு கொள்ள உதவியதற்கு காரணம் வேத உபநிஷதங்களை மனுக்குலத்துக்கு கிடைத்த ஆதி முதல் வழிகாட்டலை – சிந்தனையை – நவீன அறிவியல் ஒளியில் படம் பிடித்துக் காட்டி, நாளாந்த பிரச்சனைகளையும் மகிழ்ச்சியோடு முகங்கொடுக்கும் பலரை உருவாக்குவதற்கு காரணம்: உபநிஷத உரைகளே!
உபநிஷதங்கள் வேதங்களின் விளக்கமாகும். இவைகள் தமிழில் கிடைப்பது மிக அரிது.

‘உபநிஷதம்’ என்றால் அருகிலிருந்து கேட்டல் அருகிலிருந்து விளக்கம் பெறுதல் என்பதாகும். ஒவ்வொரு உபநிஷதமும் குரு-சிஷ்ய கலந்துரையாடலாக அமைந்துள்ளது. பிரம்மத்துடன் நம்மை ஒன்றாய்ப் பிணைப்பதால் ‘பிரம்மவித்தை’ என ‘உபநிடதத்தை’ சமய இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்த உண்மைகள் கதை வடிவமாகப் புனையப்பட்டவைகளே புராணங்கள். அவைகளையே மதமாக பலர் புரிந்து கொண்டுள்ளார் – அவ்வாறு அமைந்துவிட்டது. வேதாந்தம் எனப்படும் உபநிஷதங்கள் வேதங்களின் கருத்துக்களே. வேதாந்தம் வாழ்வியல் விஞ்ஞானம்.

அது, நமக்குள்ளே இருக்கும் உயிர்த் தத்துவம் எது, அது நம் மூலம் வெளியாவது எப்படி என்பதை விளக்க முயல்கிறது. இன்று நாம் இருக்கும் உலகில் விஞ்ஞானம் நமக்கு வசதிகள், இன்பங்கள் தந்திருக்கிறது. இருந்தும், பொங்கி வழியும் இன்ப நிறைவுக்கிடையேயும் மனிதவாழ்வு இன்பமற்று துன்பம் நிறைந்து இருக்கிறது.

இன்பம் வெளியுலகத்தில் பெறப்படும் ஒரு பொருள் என்றால், இன்று இருப்பது போல் வசதியான யுகம் இதற்கு முன்னர் இருந்ததேயில்லை. மனிதர்கள் இன்பமடையப் புறப்பொருள் வசதிகள் அனேகம் கண்ட காலம் இதுவாக இருந்தும், உறுத்தும் துயரங்கள், ஏமாற்றங்கள், அதிருப்திகள் என்பவற்றின் முடிவில்லாத அனுபவங்களின் சுமையான அரக்கப் போக்கில் சிக்கி, மனிதன் உடைந்து, அடிபட்டு, பிதுங்கி, நசுங்கி அவதியுறுகிறான். ஏன்? இக்கேள்விக்கு விடை கண்டால் உலகத்தின்பிரச்சினைகளுக்கே தீர்வு காணலாம். உபநிடதங்கள் அதைத்தான் தெளிவாக்குகின்றன.
‘உலகம் வாழ்வைத் தர முடியாது’ என்று வேதாந்தம் கூறுகிறது. ஜீவன்கள், சம்பவங்களுடனும், பொருள்களுடனும் இணைந்து தெறிக்கும் போது வாழ்க்கை, வாழ்க்கையாக தோற்றம் தருகிறது. சுருங்கக் கூறின், வெற்றியும் தோல்வியும் உலகத்தின் தன்மையை ஒட்டியதல்ல. அது தனிமனிதனையும், அவன் உலகுடன் எப்படி உறவாடுகிறான் என்பதையும் பொறுத்தே இருக்கிறது.
மனிதனை விஞ்ஞான முறையில் உபநிடதங்கள் ஆராய்கின்றன. உலகுடன் அவன் அனுபவம் ஏற்க உதவும் கருவிகளை விளக்குகிறது. சரியான இந்த அறிவு ஏற்பட்டால் நாம் ஒவ்வொருவருமே சீரும் சிறப்பும் வெற்றியும் அமைந்த வாழ்க்கையைப் பெறலாம். இருக்கும் இன்றைய சூழ்நிலை, வாய்ப்புகளிடையேயும் இன்பத்தைப் பெறலாம் என உறுதியளிக்கிறேன். உன்னுள்ளே இருக்கும் வெற்றியாளன், இனியன், இன்பம் நிறைந்தவன். அவனைக் கண்டுகொள். எமது உரைகளை ஒலிநாடாவில் இருந்து எழுதி, நூலுருவில் கொண்டுவரும் முயற்சியை செவ்வனே செய்து கொண்டிருக்கும் எனது சிஷ்யையும், பிரபல எழுத்தாளரும் ஆசிரியையுமான பாண்டிச்சேரி விஜயா ராமன் அவர்களுக்கு எமது ஆசிகளும் நன்றிகளும் உரியது. நாஸ்திக இளைஞனாக இருந்தவேளையில் ஆத்திகக் கருத்துக்களை வலிந்து என்மீது திணிக்க முயன்ற இளைப்பாறிய யாழ்.மத்திய கல்லூரி அதிபரும் கவிஞருமான நயினை நா.க.சண்முகநாதபிள்ளை அவர்களின் அணிந்துரை பொருத்தமானதாக இங்கு அமைந்துவிட்டது.

‘ஒளிரும் உண்மைகள்’ (பாகம் 1) ஆக ஈஸாவாஸ்ய உபநிஷத உரையைத் தொடர்ந்து, ‘ஒளிரும் உண்மைகள்’

There are no reviews yet.

Be the first to review “ஒளிரும் உண்மைகள் 1”

Your email address will not be published.