Description
ஒளிரும் உண்மைகள். பாகம் 3தத்வபோதம்
ஹரி ஓம்
ஒளிரும் உண்மைகள்
தத்வபோதம்
பாகம் III
ஒளிரும் உண்மைகள். பாகம் 3 தத்வபோதமாக உங்கள் கைகளில் மிளிர்கின்றது. அல்லலுற்று அமைதியின்றி அலைபாயும் அன்றாட வாழ்வில் ஆன்மீகம் அமைதித்தூதுவனாகத் தோன்றி அல்லல் அகற்றி, உள்ளத்தை அமைதியுறச் செய்கின்றது. இந்த அமைதி நிலையை ஒருவன் குருவின் துணையின்றி அடைய முடியாது. ஆயிரம் நூல்களைப் படித்து அறிவு ஜீவியாக திகழ்ந்தாலும், நூறு உபன்யாசங்களைக் கேட்டு உள்ளம் நெகிழ்ந்தாலும் அவை வெறும் தற்காலிக மார்க்கங்களே தவிர, உண்மையான சாந்திக்கு அவை உதவா. அறியாமை என்னும் அழுக்கு நீக்கப்பட்டு, உள்ளம் ஒளிரத்துவங்கும் பொழுது தான் அமைதிக் கதிர்கள் அங்கு பரவத்துவங்கும்.
அப்படி நிகழ்த்தப்பட்ட ஒரு ஞான வேள்வி தான், ஆன்ம சாதகர்களுக்கு வழங்கப்பட்ட அருளுரைகள் தான் இந்தத் தத்வபோதமாகத் தங்கள் கரங்களில் தங்கி நிற்கின்றது. இனி இதனில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் மூழ்கிப் படித்து, நமது சனாதன தர்மம் வகுத்துத் தந்திருக்கும், வாழ்க்கை பற்றிய ‘ஒளிரும் உண்மை’களைப்புரிந்துகொண்டு, மேலும் அறிவுத் தெளிவு பெற்று ஞான சூரியனாக ஒளிர்வதற்குக் கனடா யோக வேதாந்த நிறுவனத்தின் வாயிலாக வாரந்தோறும் நடைபெற்று வரும் ‘ஆன்ம அனுபூதிப் பயிலரங்க” நிகழ்விற்கு வருகை தாருங்கள். பரிணாம முன்னேற்றம் பெறுங்கள்.
ஓம் தத் ஸத்
-கனடா யோக வேதாந்த நிறுவனம்-
There are no reviews yet.