Description
புதியதொரு நிலையை நோக்கி…ஹரி ஓம்
உங்களோடு….
வணக்கம்!
ஒவ்வொரு மனிதனும் தனது சூழ்நிலையை வடிவமைத்துக் கொள்ள முடியும். ஒருவர் தனது ஜீவனை அறிவியற் சிந்தனைகளின் உதவியால் முடிவற்ற வாழ்வுக்கான, அந்த மாபெரும் ஆதாரத்துடன் உணர்வு ஒன்றைச் செய்வதில்தான் அவரது ஏழ்மைக்கான, உடல்நல மின்மைக்கான, மகிழ்ச்சி யின்மைக்கான மருத்துவம் இருக்கிறது…! படைத்தவனுடனான இந்த உணர்வொன்றிய இணக்கமே அனைத்து நிம்மதி, ஆற்றல் மற்றும் வளமைக்கான மறைபொருளாகும். படைப்பின் தெய்வீக நோக்கம் மனித அறிவினால் புரிந்து கொள்ளும் அளவிற்கு வேதங்களினால் விளக்கப்பட்டுள்ளது.
தற்கால மனிதன் இன்றுபோல் என்றுமே மன அமைதிக்காக ஏங்கியதில்லை. உள் அமைதிக்கான நுணுக்கத்திற்கு வழி காட்டும் வகையில் இன்று சமயம் இல்லையாதலால் லட்சக்கணக்கானவர்கள் இன்று போகாத வழிகளில் சென்று இந்தக் குறையைத் தீர்த்துக் கொள்ள முயல்கிறார்கள். மன நிம்மதி மருந்துகளின் விற்பனை இன்று “பூதாகாரமாய் ” பெருகி உள்ளது. மக்கள் மன அமைதியை மருந்துகளால் பெற முடியுமா? என்ற பட்டிமன்றம் மேற்கு நாடுகளில் நடைபெறுகி மன அமைதியைப் பெறுவதில் அனைத்திலும் மேலான ஒரு வழி கடவுளுடன் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதுதான்! கடவுள்தான் நமது உள்ளார்ந்த விருப்பம் என்று நாம் உணராமல் இருக்கலாம்.
மகிழ்ச்சியிழந்து, ஓய்வின்றி, தவறான முறைகளில் தமது அடிப்படை விருப்பம் என்ன என்பதை தவறான இடங்களில் தேடி, அது முடியாமல் கடைசியில் அதைக் கடவுளில் கண்டறிகிற பலரை நான் சந்தித்திருக்கிறேன். அதனால்தான் இன்றைய நாள்களில் கடவுள் பிரபலமாகி விட்டார். லட்சக் கணக்கானோா ஆன்மீக, சுயமுன்னேற்ற நூல்களைப் படித்து வருகிறார்கள் என்பதும் தெரிகிறது. ஒரு மனிதன் தான் ஏதோ ஒரு முக்கியமான லட்சியத்திற்காக இருக்கிறோம். தான் ஒரு விற்பனைப் பொருளல்ல. எவ்வளவு பணத்திற்கும் எத்தகைய பரிந்துரைகளுக்கும் எப்படிப்பட்ட பதவிக்கும் அடிமைப்பட்டுக் கிடக்குமாறு தனது மானிடத்தை அடகு வைக்காதவன் என்று நிரூபித்துக் கொள்ளும்போதுதான் முக்கியத்துவம் பெறுகிறான். மாபெரும் ஆற்றலின் இருப்பிட மாகிறான். தன்னால் ஒப்புக்கொள்ள முடியாத எதற்கும் தனது பெயரைக் கடன் கொடுக்கமாட்டான்.
“உங்களது மனத்தை உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து உங்கள் வாழ்க்கையை நீங்களே வகுத்துக் கொண்டு எல்லை யற்ற உங்களது உள்ளத் திறனை நீங்கள் தெரிந்து கொள் வது என்பது என்ன என்பதை உங்களுக்குப் புலப்படுத்து வதற்காக இந்நூலை எழுத ஏன் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று உங்களுக்கு வாசித்த பின்பு புரியும்.
ஒப்பற்ற மறைபொருளை ரகசியத்தை இந்நூலில் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இந்நூலை “ஞானத்தைத் தேடுபவர்களின் நலனுக்காக அர்ப்பணிக்கிறேன். குருபூர்ணிமாவில் இந்நூல் வெளிவருவது மிகவும் பொருத்தமானதே!
எமது உபதேச உரைகளைப் புத்தக வடிவில் கொண்டு வந்திருக்கும் CYVO செயலாளர் பிரம்மஸ்ரீ சோமாஸ்கந்த சேகருக்கு எமது பாராட்டுகளும் ஆசிகளும், புத்தகமாக்கு வதில் உதவிய கிருபா, விவேகா, இருதயா, சசி, சபேசன், வசி ஆகியோருக்கு எமது நன்றி கலந்த ஆசிகளும் பாராட் டுக்களும் உரித்தாகுக.
“புதியதொரு நிலையை நோக்கிப்” பயணியுங்கள்!
அமைதி, அன்பு, ஆசிகளுடன்
ஸ்வாமி பரமாத்மானந்தா
There are no reviews yet.