Description
மரணத்துடன் ஓர் உரையாடல்ஹரி ஓம்
கனடா யோக வேதாந்த நிறுவனம்
ரொறன்ரோ
உங்களுடன்!
மனிதகுலத்தின் ஆதாரமாக அடி தருவது அனைத்துச்செயல்களுக்கும் இருந்து அவற்றை நிறைவேற்றி பரப்பிரம்மமே! எங்கும் பரவி, எல்லாமாயிருக்கின்ற அசையாப்பிரம்மம்தான் சக்தியாக மாறிச் செயல்படுகின்றது. அதனருளால் சக்தி பெற்றுத்தான் எல்லோரும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றோம். இந்த சக்தி அதிகரித்துச் சிலருக்கு ஆற்றலாக வெளிப்படுவதும், அல்லது செய்ய வேண்டிய செயல்களை கூடச் செய்ய இயலாமல், சக்தியிழந்தவர்களாகப் பிறர் தயவையும், உதவியையும் எதிர்பார்க்கின்ற நிலையில் சிலர் வாழ்வதும், நாம் கண்கூடாகக்காண்கின்ற ஒன்று. எல்லாவற்றையும் பரப்பிரம்மம் செய்விக்கின்றது.தான் மிகச் சிறந்த பக்தர்களாக, இறைவன் மீது அசையா நம்பிக்கை வைத்து எல்லாம் அவன் செயல் என்ற உணர்விலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்துக்கள், தங்களின் உண்மை நிலை என்ன என்பதைப் பற்றிச் சற்றும் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் சரியான விளக்கம் தரப்படாத நிலையில் அவர்கள் பல திசைகளிலும் இழுபட்டுக் கொண்டிருக்கின்றனர்
மதங்களுக்கெல்லாம் ஆதித்தாயாக விளங்குகின்ற சனாதன தர்மமாகிய இந்து மதத்தைப் பற்றியும் அது உரைக்கின்ற வாழ்க்கை பற்றிய முழு விவரங்களையும் முறையாக அறிந்து கொள்கின்ற ஓர் இந்து பிறகு எவ்விதத் தளும்புதலும் இன்றி நிறைகுடமாக வாழ்வான். அறிய வேண்டியதை அறிந்து அமைதியடைகின்ற அவனால் அவனது சுற்றுச்சூழலே அமைதியடையும் இந்த அமைதியால் சமுதாயம் சிறக்கும்.
அமைதியிழந்த நிலையில் அலைமோதி அவதிப்பட்டுக் கொண்டிருக்கும், அறியாமை என்னும் இருளில் மூழ்கியிருக்கும் மனதைச் சாந்தப்படுத்தி, அதற்கு வழிகாட்டுகின்ற புத்தியை சுத்திப்படுத்தி, அதனை ஞானம் பெற்று ஒளிரச் செய்வதுதான் உபதேசம் என்பது. குருவின் மூலமாகப் பெறுகின்ற உபதேசத்தின் மூலம்தான் ஒருவனுக்குக் காலம் காலமாக ஒளிர்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை பற்றிய உண்மைகள் தெரிய வரும்.
அப்படிப்பட்ட “ஒளிரும் உண்மைகள்” தான் இங்கு இரண்டாம் பாகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஒளிரும் உண்மைகள் – பாகம் 1 ஈஷாவாஸ்ய உபநிஷத விளக்கமாக எமது கனடா யோக வேதாந்த நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு ஒளிரும் உண்மைகள் பாகம் 2 கடோபநிஷத விளக்கமாக இப்பொழுது உருவாகியுள்ளது.
இங்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பயிலரங்குகளில் எம்மால் நிகழ்த்தப்பட்ட உபதேச உரைகளே இங்குத் தொகுக்கப்பட்டு வழங்கப் பட்டுள்ளது.
இந்த எமது உரைகளை ஒலிநாடாவில் இருந்து கேட்டு, சரியாக வடிவமைத்து எழுதி, நூல் வடிவில் கொண்டு வரும் முயற்சியைச் செவ்வனே செய்து கொண்டிருக்கும், எனது சிஷ்யையும், பிரபல எழுத்தாளரும், ஆசிரியையுமான, (பாண்டிச்சேரி) திருமதி விஜயாராமன் அவர்களுக்கு எமது நல் ஆசிகளும், நன்றிகளும் உரியது.
மரணத்தோடு சம்பாஷணை என்பது தான் இந்த உபநிஷதத்தின் சிறப்பு. மரணம் இன்றுவரை ஒரு மனிதனைப் பயப்படுத்துகிற ஒன்றாகவே இருந்து வருகிறது. பழைய சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு, வேறொரு புதிய சட்டையைப் போடுவது போன்றதுதான் மனிதனின் இறப்பும், மறுபிறப்பும். இதில் ஏன் பயப்படவேண்டும்? பயப்பட என்ன இருக்கிறது? மரணம், இயற்கையின் நியதி. பிறப்பே இனி வேண்டாம்! என்று தான் மிகப் பலரும் சொல்கின்றனர். அப்படி உண்மையாகவே விரும்புவர்களுக்கு உதவுகின்ற வழிகாட்டி இந்தக் கடோபநிஷத், அப்படியே மீண்டும் பிறந்தாலும் உயர்ந்த தரத்தில் வாழ வேண்டும் என்று விரும்புவர்களும் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதையும், இந்த நூல் விளக்கமாக எடுத்து சொல்கிறது.
மொத்தத்தில் பொய்யான வாழ்க்கையிலிருந்து சத்தியத்தைச் சென்று அடையவும் இருளிலிருந்து ஒளியை நோக்கிச் செல்லவும் , இறப்பிலிருந்து அழிவில்லா அமரத்துவத்தைச் சென்று சேரவும், இந்த “ஒளிரும் உண்மைகள்’ பாகம் இரண்டு ‘மானிடர் ஆன்மா மரணமெய்தாது’ என்ற கண்ணனின் கூற்றை நன்கு விளக்கி, உங்களுக்கு உறுதியாக வழிகாட்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
ஓம் தத் ஸத்
ஸ்வாமி பரமாத்மானந்தா
இந்நூல் எனது பெற்றோருக்கு சமர்ப்பணம்
There are no reviews yet.