Description
விண்ணோடு விரியும் ஒளிவணக்கம் வாசகர்களே!
‘தர்மத்தைக் காக்க மீண்டும் வருவேன்’. வெளியீடாகும். மனிதப் பரிணாம வளர்ச்சியில் இறுதிக் கட்டமான ஆன்மீகத் தளத்திற்கு அதற்குரியவர்களை அறிவியல் பூர்வமாக அழைத்துச் செல்லும் முயற்சியே இவ்வெளியீடு. உடல், மன, உணர்ச்சி மட்டங்களில் சாதாரண மட்டங்களில் தமது சக்தியைச் செலவழித்துக் கொண்டிருக்கும் பெரும்பாலான மக்கள் உயர் பரிணாம நிலையை நோக்கிச் செலுத்துவது ஒரு யுக தர்மமெனக் கருதியதால் ஒரு புதிய பரிமாணத்தில் இவ்விளக்கங்கள் இலகுவாக அமைந்துவிட்டன. செடி ஒன்று முளைவிட்டால் இறுதியில் மலரத்தான் வேண்டும். மனிதப்பிறவி எடுத்தோர் அனைவரும் ஞான ஒளி பெற்றுத்தான் விடுதலைடைய முடியும் என தர்ம வழிகாட்டல் பொக்கிஷங்கள் அடித்துக் கூறுகின்றன. ஒரு புதிய தளத் திற்குத் தங்களை அழைத்துச் சென்றால், இந்த வெளியீட்டின் பயன் எய்தப்பட்டதாகிறது.
பயிற்சிப்பட்டறை உரைகளை அழகு தமிழால் எழுத்தாக்கம் செய்துதவிய எழுத்தாளரும் சிஷ்யையுமான திருமதி விஜயா ராமனுக்கு நன்றிகளும் ஆசிகளும். கிருபா , ஹிருதயா , ஏனையோர் நன்றிக்குரியவர்கள்
பரிமாணத்தைத் தொடர்ந்து உந்தலுறவைக்கும்
அன்பளாவிய
ஸ்வாமி பரமாத்மானந்தா
ரொறன்ரோ.
மார்ச் 03, 2013
There are no reviews yet.